மொடா_முழுங்கி
வாழ்வியல் சிந்தனை
#மொடா_முழுங்கி
- எங்க மாமா ஒருத்தரு ஊருல இருந்து மொபைலுக்கு கால் பண்ணாரு. என்ன மாப்புள நல்லா இருக்கிறா? என் மவ பேத்தி எல்லாம் எப்படி இருக்காங்க? அங்க மளிகை சாமான் எல்லாம் கிடைக்குதா என்று நலம் விசாரிச்சாரு.
- நானும் பதில் சொல்லிபுட்டு. அங்க ஊருல எல்லாம் எப்படி இருக்காங்க?னு விசாரிச்சுட்டே இருக்கப்போ அவரு, "ஏன்டா மருமவனே நம்ம செல்லுக்கு ஒரு மெசேஜ் வந்தது. இந்த அம்பானி அதானி அப்புறம் இந்த தூத்துக்குடியில் ஒரு பிரச்சனை வந்ததே. சரியா நினவுல வரல. ஏதோ அகர்வா.. ஆ... அனில் அகர்வால் அப்புறம் ஒரு பத்து பேத்துக்கு மேல இருக்கும். இவனுங்க எல்லாம் நூறு நூறு கோடிக்கு மேல கொரோனா நிவாரணமா பணம் கொடுத்து இருக்கானுங்க போலவே..!!'
- "பரவாயில்ல என்னதான் இருந்தாலும் நம்ம இந்தியா நாட்டு வியாபாரிங்க தான் நமக்கு பணம் கொடுத்து உதவுறானுங்க..! இந்த வெளிநாட்டு கம்பெனிகாரனுங்க ஒத்த பைசா கொடுக்கல பாரு"னு சொல்லிட்டு இருந்தாரு.
- அவரு சொன்ன எல்லாதையும் அமைதியாக கேட்டுபுட்டு,
- "மாமா, நீங்க சொன்ன அந்த பத்து தொழிலதிபர்களும் சேர்த்து இரண்டாயிரம் இல்லனா மூவாயிரம் கோடி கொடுத்து இருப்பாங்களா?னு கேட்டேன். அவரு இருக்கும் மாப்புளனு சொன்னார். "இந்த பத்து பதினைந்து தொழிலதிபர்கள் சேர்ந்து மொத்தமா நம்ம வரிப்பணத்துல எவ்வளவு கடன் வாங்கி இருப்பாங்க தெரியுமா?"னு கேட்டேன். அவரு என்ன மாப்புள சொல்லுற இவ்வளவு பெரிய தொழிலதிபருங்க கடன் எல்லாமா வாங்கி வைச்சிருப்பானுங்க?"னு கேட்டாரு.
- கடன் வாங்குனது மட்டும் இல்லை மாமா கிட்டத்தட்ட வாங்குன ரூ.10,00,000 லட்சம் கோடி அவங்க திருப்பி தராததால அரசே அவங்க கடனை தள்ளுபடி செஞ்சு இருக்குனு சொன்னேன். அவரு என்ன பத்து லட்சம் கோடியா? நம்ம பாலு மவன் டிரேக்டர் வாங்கிட்டு இரண்டு மாசம் தவனை கட்டலனு போன மாசம் டிரேக்டரை பேங்க்காரன் பிடுங்கிட்டு போயிட்டான். இவனுங்களை எப்படி சும்மா உட்டானுங்க?"னு கேட்டாரு.
- அதெல்லாம் அப்படி தான் மாமா. ஒரு பத்து பதினைஞ்சு குடும்பத்துக்கு மட்டும் பத்து லட்சம் கோடி கடன் பணத்த தள்ளுபடி செஞ்சு இருக்கு. அதுல ஒரு ஆள் கூட தமிழ் இல்ல. அந்த கடன் தள்ளுபடி, அதாவது அரசு வேணாம்னு சொன்ன பணம் மொத்தமும் நம்ம வாங்குற மளிகை சாமானுக்கும், மருந்துக்கும் கட்டுன வரி பணம் தான் மாமா.
- கொரோனா நிவார நிதி ஒட்டுமொத்தமா அரசால ஒதுக்க முடியல. அதனால, மக்கள்கிட்ட நிவாரண நிதி கேட்குது. இந்த கடன் கட்டாம இருக்க தொழிலதிபர்கள் வாங்குன கடனுல 10% திருப்பி கொடுத்தாலே நம்ம அரசு யாருகிட்டையும் கையேந்த தேவையில்லை.
- அவரும், "ஆமா, மாப்புள நம்ம ஊரு மளிகை கடைக்காரரு முருகேன் கூட நம்ம ஊரு காரணுங்களுக்கு இந்த சமயத்துல பணம் இல்லனாலும் கணக்குல எழுதி வெச்சுக்கிட்டு பொருள தரான். அந்த மனசு கூட இந்த பணக்கார முதலாளிகளுக்கு இல்லையே!"னு முனுமுனுத்துட்டே போன கட் பண்ணாரு.
JOIN US👇👇👇👇👇👇👇👇👇
Comments
Post a Comment