உலகக்கோப்பை ஒத்திவைப்பு காரணமாக முடிவுக்கு வருகிறது தோனியின் இந்திய அணிப் பயணம்?*

 உலகக்கோப்பை ஒத்திவைப்பு காரணமாக முடிவுக்கு வருகிறது தோனியின் இந்திய அணிப் பயணம்?*
   


20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஒத்திவைக்கப்படுவதால் தோனியின் இந்திய அணிப் பயணம் முடிவுக்கு வருகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது தோனிக்கு 39 வயதாகிறது.

ஏற்கனவே டெஸ்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர், கடைசியாக உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ஆடினார். 

அதன் பின் சர்வதேச போட்டியில் அவர் ஆடவில்லை. இந்நிலையில் தோனி மீண்டும் அணியில் இணைவாரா என்கிற கேள்விக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால் அவர் மீண்டும் இந்திய ஆடுவார் என்று இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். 

இதனால் ரசிகர்கள் மீண்டும் தோனி இந்திய அணிக்கு ஆடுவார் என்று மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

இதனால் தோனி பற்றிய கேள்வி மீண்டும் எழுந்தது. 

எனினும் அவர் உலகக்கோப்பையில் ஆடுவார் என்று அவர் ரசிகர்கள் எண்ணினார்கள். 

ஆனால் இப்பொது 20 ஓவர் உலகக்கோப்பையும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் தோனிக்கு 40 வயதாகிவிடும். 

இப்போதே அவரால் முன்பு போல அதிரடியாக ஆட முடியவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

தோனியும் இப்பொது அதிரடியாக ஆட சிறிது நேரம் எடுத்துக்கொண்டே வருகிறார். 

இதனால் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையில் தோனி ஆடுவது சந்தேகம் தான். 

ஒருவேளை அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தோனி ஆடினால் அது மிகவும் ஆச்சரியமான விசயமாக தான் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் தோனியின் ஆக்ரோசத்தை பார்க்கலாம்.




Comments

Popular posts from this blog

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B)

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)