இப்படியும் ஒரு பாட்டியா

                  SKTECHNEWS

           Subscribe panunga நண்பா
           
               👍சாலமருத_திம்மக்கா👍



இந்திய அரசால் 1995ல் தேசிய குடிமகன் விருது, 2019 பத்மஸ்ரீ விருது போன்ற பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் *107 வயதான திம்மக்கா*. படிப்பறிவு இல்லாத இவர் கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் வாழும்  *உலகமறிந்த பசுமை ஆர்வலர்*. 

 1928 கர்நாடகாவில் ஹுலிகல்லு எனும் கிராமத்தை சேர்ந்த சிக்கையா-வை மணமுடித்தார் இவர்.  திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்தனர் இத்தம்பதியினர்.  அதன் வெளிப்பாடாக 1940-ஆம் ஆண்டு,  சாலையின் இருபுறங்களிலும் மரங்களை நட்டு தங்கள் குழந்தைகளாக எண்ணி வளர்க்களாம் என்று முடிவு செய்தனர்.  அன்று முதல் அங்கு உள்ள நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 385 ஆலமரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். 
 
தினம் கூலி வேலை செய்த இவர் இன்றுவரை 8000திற்கும்  மேலான மரங்களை வளர்த்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் தினமும் அதற்கு தேவையான தண்ணீர் ஊற்றுவது, செடிகளுக்கு வேலி அமைப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார் திம்மக்கா.  

இவரால் வளர்க்கப்பட்ட 385 ஆலமரங்களையும் 2019 ஆம் ஆண்டில் அரசின் திட்டப்படி சாலையை அகலப்படுத்தியதற்காக வெட்டப்படும் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளானது. இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில்,  70 ஆண்டுகள் பழமையான மரங்களை காப்பாற்ற மாற்று வழிகளைக் காண அரசாங்கம் முடிவு செய்தது.

தற்போது இவர் சாலையின் இருபுறங்களிலும் மரம்நட்டவர் எனும் பொருள்பட கன்னடத்தில் *சாலமருத திம்மக்கா* என அறியப்படுகிறார்.

 மேலும் இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓக்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு யு.எஸ். சுற்றுச்சூழல் அமைப்புக்கு திம்மக்காவின் சுற்றுச்சூழல் கல்விக்கான வளங்கள் என்று பெயரிட்டுள்ளனர்.

1991-இல் தன் கணவரின் மறைவிற்குப் பின்னும் இன்றுவரை தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் மரங்களைப் பராமரித்து வருகிறார் திம்மக்கா. இன்றும் பல பசுமை பாதுகாப்பு தளங்களில் பணியாற்றும் திம்மக்கா பெண்களின் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்.

Comments

Popular posts from this blog

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B)

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)