எப்படி தோன்றியது இந்த FOP FRIENDS OF POLICE

          WELCOME TO SK TN NEWS

இந்த FOP தோன்ற காரணம் என்ன எதற்காக தோன்றியது
  • Rss என்பது என்ன


  •  சாத்தான்குளம் படுகொலையில் *Friends Of Police* என்ற சட்டவிரோத குண்டர்களின் பங்கு தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

  • இன்று Friends Of Police பெயரில் தமிழ்நாட்டின் காவல்துறையில் ஊடுருவியிருக்கும் *"சேவா பாரதி"* என்ற அமைப்பினர் யார்?

  • சேவா பாரதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிப்புகளில் ஈடுபட்டதற்காகவும், கிறித்தவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதற்காகவும் தடை செய்யப்பட்டிருந்த ஒரு தீவிரவாத கும்பலாகும். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்த ஆவணங்களை 2003ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதல்வர் வெளிப்படையாகவே வெளியிட்டு பேசினார்.

  • மேலும் 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், 1999ல் ஒரிசாவில் ஏற்பட்ட புயலின் போதும், நிவாரண சேவைகள் செய்வதாக சொல்லி களமிறங்கி மக்களிடமும், பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான பணத்தை வசூலித்து அவற்றை RSS தீவிரவாத அமைப்பினை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தியது. சேவா இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் வாயிலாக 20 மில்லியன் பவுண்ட் பணம் வெளிநாடுகளில் வசூலிக்கப்பட்டது. வசூலித்ததில் நான்கில் ஒரு பங்கு பணம் RSS நடத்திய மதவாத பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. அப்பள்ளிகளில் கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பாடத்திட்டங்கள் நேரடியாக வைக்கப்பட்டிருந்தன. RSS பள்ளிகளின் பாடத்திட்டங்கள் மதவாதத்தன்மையுடன் இருப்பதாக NCERT குற்றம் சாட்டியது. இதனை அப்போதைய Frontline இதழ் அம்பலப்படுத்தியது. 

  • நிவாரண முகாம்களில் RSS ஷாகாக்கள் நடத்தப்பட்டன. இரவு நேரங்களில் சமூக விரோத VHP அமைப்பின் ஆட்கள் கிறித்துவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் எதிரான மதவெறி பிரசங்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகவே 2002 ம் ஆண்டு குஜராத்தில் இசுலாமியர்கள் மீது இனப்படுகொலை RSS கும்பலால் நிகழ்த்தப்பட்டது.

  • ஒவ்வொரு பேரிடரையும் மதவெறியினை வளர்த்தெடுத்து, சமூக விரோத செயல்பாடுகளை சமூகத்தில் விதைப்பதற்காக இந்த அமைப்பு பயன்படுத்தி வருகிறது. பேரிடர்களில் சேவை செய்கிறோம் என்ற பெயரில் இறங்கி மதவெறியையும், சாதி வெறியையும் தூண்டும் வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். 

  • காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவினைப் பயன்படுத்தி சேவா பாரதி என்ற சமூக விரோத அமைப்பிற்கு மட்டும் கோயில் வாசலில் துவங்கி நகர் முழுவதும் பிரசங்கங்கள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சப்பைகட்டு காரணங்களை சொல்லி தொடர்ச்சியாக அனுமதி மறுக்கும் அதிமுக அரசும், காவல்துறையும் இந்த சமூக விரோத கும்பலுக்கு மட்டும் தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருவதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

  • வட மாநிலங்களைப் போல் அல்லாமல், மதக்கலவரம் இல்லாத மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க அதிமுக அரசு RSS சமூக விரோதிகளுக்கு துணைபோகிறதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

  • இன்று Friends of Police என்ற பெயரைப் பயன்படுத்தி இந்த சேவாபாரதி கும்பல் காவல்துறையில் ஊடுருவி மக்களை அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. RSS வன்முறை கும்பலிடமிருந்து காவல்துறையை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

  • சேவாபாரதி அமைப்பும், Friends of Police என்ற நடைமுறையும் தடை செய்யப்பட வேண்டும் என்று பல்்வேறு  தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

  • உங்கள் கருத்து என்ன நண்பா  comment panunga

  • Subscribe panunga நண்பா


Comments

Popular posts from this blog

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(B)

காவலர் தேர்வு 2013 இல் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி 1(A)