புதிய கல்விக்கொள்கை ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்
புதிய கல்விக்கொள்கை ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்..!
புதிய கல்விக் கொள்கை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை:
புதிய கல்விக் கொள்கை நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது
*இந்திய கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்*
வேலை வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டும்
நமது கல்வி முறையில் புதிய கல்விக் கொள்கை சாதகமான மாற்றத்தை உருவாக்கும்
ஏற்றத் தாழ்வுகளற்ற கல்வி வழங்குவதை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது
பல வருடங்களாக நடைபெற்ற ஆலோசனை, விவாதங்களை தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது
சீர்திருத்த நடவடிக்கைகள் மட்டுமே எந்த விஷயத்திலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும்
இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நமது கடமை
கல்வி மற்றும் திறன்களுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க புதிய கல்விக் கொள்கை அவசியம்
திறன் மேம்பாடு என்பதை அடிப்படையாக கொண்டு நமது புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது
மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி அவசியம்
மாணவர்கள் புதுவிதமாக சிந்திக்க நாம் வழிகாட்ட வேண்டும்
எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பலன் அடையும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது
2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி என்பது தான் இலக்கு
ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் மாணவர்கள் கல்வி பயில வேண்டும்
உலகத்தரத்திற்கு இணையான கல்வியை நம் மாணவர்களும் பெற வேண்டும்
உலகத்தரமான கல்வியை மாணவர்கள் பெற்றாலும் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை மறக்க கூடாது
மாநில மொழிகளில் பாடம் கற்பிப்பது இளம் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும்
கல்வி பயிலும் போதே உலக அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்
பள்ளிக்கூடம், வகுப்பறைகளில் மாணவர்களின் சுமைகளை குறைக்க வேண்டும்
வகுப்புகள், பாடங்கள் என மாணவர்கள் மீது நாம் அழுத்தம் கொடுக்க கூடாது
கலந்தாலோசனை, ஆய்வு அடிப்படையிலான கல்வியை நாம் ஊக்குவிக்க வேண்டும்
பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களுக்கு பலதரப்பட்ட வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும்
சீர்திருத்தங்களை நாம் வேகப்படுத்தும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சி மேம்படும்
அனைத்துவிதமான தொழிலாளர்களும் மதிப்பு மிக்கவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க கூடாது
தொழிலாளர்களை இளக்காரமாக பார்க்கும் போக்கை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்
உலகம் முழுவதும் இந்தியா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது
பழைய கல்விக் கொள்கையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை
பழைய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு சுமையை அதிகரிக்கும் வகையில் இருந்தது
பிரச்சனைகளுக்கு மாணவர்கள் தீர்வு காணும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது
புதிய கல்விக் கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தலுக்கு முக்கியத்துவம்
சிறப்பான உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்கும்
புதிய கல்விக் கொள்கையால் நாடு புதிய நிபுணர்களை எதிர்காலத்தில் பெறும்
புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களின் திறன்களையும் மேம்படுத்தும்
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது
புதிய கல்விக் கொள்கையின் வெற்றியை நாம் அனைவரும் இணைந்து உறுதிப்படுத்த வேண்டும்
புதிய கல்விக் கொள்கை தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும்
2013 காவலர் தேர்வு வினாக்கள்👇
https://techtnsk.blogspot.com/2020/08/q.html
Join us👇👇
https://chat.whatsapp.com/E5dbA8FYFKK4zPEAbON3Hq
Comments
Post a Comment